Published : 29 Apr 2020 05:48 PM
Last Updated : 29 Apr 2020 05:48 PM

வியட்நாம் போரில் இறந்தவர்களை விட கரோனாவில் அதிக அமெரிக்கர்கள் இறப்பு

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை வியட்நாம் போரில் மரணித்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 59,266 ஆகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,35,765 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் இயங்கும் ஜான் ஹோப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை வியட்நாம் போரின்போது பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா - வியட்நாம் போரில் சுமார் 58,220 அமெரிக்க ராணுவ வீர்ரகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அமெரிக்காவில் 59,266 பேர் கரோனா தொற்றில் மட்டும் பலியாகியுள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறப்பாகச் செயல்படவில்லை என்றும், இதன் காரணமாக இவ்வருட இறுதியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவு என்றும் ஊடகங்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x