

அமெரிக்காவில் லாக் டவுன் காரணமாக சுமார் 2 கோடியே 80 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர், இது 4 கோடியே 87 லட்சமாக அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த நிலமைகளினால் ஹெச்1பி விசா வைத்திருக்கும் அயல்நாட்டவர்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜூன் மாதவாக்கில் அமெரிக்காவில் இருக்கும் உரிமையை இழக்கக் கூடும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக குடியேற்றக் கொள்கை ஆய்வாளர் ஜெரமி நியூஃபீல்ட் என்பவர் புளூம்பர்க் செய்தி ஏஜென்சிக்குத் தெரிவிக்கும் போது ஹெச்1பி விசாதாரர்கள் தங்கள் சொந்த நாடுகளுகுச் செல்ல அறிவுறுத்தப் படலாம் என்கிறார்.
ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தொழில்நுட்பத்துறை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விசாக்களில் இருக்கும் பணியாளர்கள் கடும் பாடுபட்டு வருகின்றனர். ஏனெனில் ஹெச்1பி விசாதாரர்கள் இருக்கும் இடம், மற்றும் அவரை பணியிலமர்த்தியவர் அடிப்படை குறைந்த பட்ச சம்பளம் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளக் குறைப்பு, வீட்டிலிருந்தே பணியாற்றுவது என்பது கூட அங்கு விசா விதிமுறைகளுக்கு எதிரானதாகச் செல்ல வாய்ப்புள்ளது. வேலையிழந்த ஹெச்1பி விசாதாரர்கள் அங்கு புதிய வேலையைத் தேட 60 நாட்கள் அவகாசம் உள்ளது. இவர்கள் வேறொரு விசா வகைக்கு மாறலாம் அல்லது தாய்நாடு திரும்பலாம்.
வேலையைத் தக்கவைக்க முடிபவர்கள் கூட கோவிட்-19 பிரச்சினைகளினால் வீசா புதுப்பிக்கப்படாமல் போக வாய்ப்புள்ளது.
இந்த விசா நெருக்கடி, “மனிதர்கள் மட்டத்திலும் பொருளாதார மட்டத்திலும் விசா நெருக்கடி பெரிய அழிவை ஏற்படுத்தி வருகிறது” என்று டக் ராண்ட் என்ற இன்னொரு ஆலோசகர் புளூம்பர்கிடம் தெரிவித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப் பொருளாதாரம் மீண்டும் முழுவீச்சில் செயல்படும்போது வேலையிழந்த அமெரிக்கர்களின் பணிகளை பாதுகாப்பதே முக்கிய முன்னுரிமை என்று தெரிவித்ததையடுத்து இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
-ப்ளூம்பர்க் செய்தி ஆதாரங்களின்படி