

லண்டன்: கொரோனா தாக்கத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்த வரும் பிரிட்டீஸ் ஏர்வேஸ் நிறுவனம் 12 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்கிறது.
மொத்தம் 45,000 ஊழியர்களைக் கொண்டது பிரிட்டீஷ் ஏர்வேஸ்.
கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. பிரிட்டனில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் பலிகியுள்ளனர். இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை உள்பட அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் கரோனா பாதிப்பால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்நிறுவனத்தின் சர்வதேச போக்குவரத்து நி்ர்வாக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நிலைமையை கட்டுப்படுத்த விமானிகள் உள்பட தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகம் எடுத்துளள முடிவால், அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹீத்ரூவிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 300 விமானங்கள் பறக்கும் ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் குறைந்த அளவிலேயே டேக் ஆஃப் ஆனது.
இதனையடுத்து தொழிற்சங்கங்கள் ஆவேசமடைந்துள்ளன. வேலையை மீட்டெடுக்க போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். அரசு உதவியையும் நிராகரித்து ஊழியர்கள் வயிற்றில் அடிப்பதா என்று விமானிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள் கடும் கோபாவேசமடைந்துள்ளனர். ஆனால் நிறுவனமோ கரோனா பாதிப்பினால் 300 பில். டாலர்களை இழந்துள்ளோம் என்கிறது.
இதனால் மேலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆட்குறைப்பை செய்யும் என்றும் மற்ற விமான சேவை நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்யும் என்று பிரிட்டனில் எதிர்பார்க்கப்படுகிறது.