தூய்மை கங்கை திட்டத்தில் ஜெர்மனி ஆர்வம்

தூய்மை கங்கை திட்டத்தில் ஜெர்மனி ஆர்வம்

Published on

கங்கை நதியை தூய்மைப் படுத்தும் திட்டத்தில் இணைய, ஜெர்மனி ஆர்வம் தெரிவித் துள்ளது.

ஐரோப்பாவின் முக்கியமான ரிகைன் நதியை சுத்தப்படுத்திய அனுபவம் ஜெர்மனிக்கு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கையை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள அந்நாடு விருப்பம் தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஜெர்மனி சென்றுள்ளார். நேற்று பெர்லினின் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் அவர் பேசியது:

இந்தியாவில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் கங்கையை தூய்மையாக்கும் திட்டம், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி செய்து தரும் துய்மை பள்ளி திட்டம் ஆகியவற்றில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜெர்மனி ஆர்வம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் பிராங் வால்டர் என்னிடம் பேசினார்.

இந்தியாவில் 30 ஆண்டு களுக்குப் பிறகு இப்போது இழுபறி ஏதும் இல்லாத வலுவான ஆட்சி அமைந் துள்ளது என்று சுஷ்மா சுவராஜ் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in