Last Updated : 16 Aug, 2015 11:16 AM

 

Published : 16 Aug 2015 11:16 AM
Last Updated : 16 Aug 2015 11:16 AM

இரண்டாம் உலகப் போர் குறித்து ஜப்பான் பேரரசர் ஆழ்ந்த வருத்தம்

இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது தந்தை ஹிரோஹி டோவின் பெயரால் நடத்தப்பட்ட அந்தப் போர் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என‌, ஜப்பான் பேரரசர் அகிஹிடோ கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் 1945-ம் ஆண்டு நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் முதல்முறையாக ஜப்பான் பேரரசர் மேற்கண்ட வருத்தத்தை தெரிவித்துள்ளார் என்று 'ஜிஜி பிரஸ் நியூஸ் ஏஜென்ஸி' மற்றும் 'மெய்னிச்சி' நாளிதழ், உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் கூறியுள்ளன.

மேலும் அவர் கூறியுள்ள தாவது: வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, அந்தப் போரி னால் ஏற்பட்ட சோகம் போன்று மீண்டும் ஒரு சோகம் நிகழாது என்று நம்புகிறேன்.

மக்களோடு இணைந்து நானும், இந்தப் போரில் உயிரிழந்தவர் களுக்காக எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, நமது நாடு மேலும் வளர்ச்சி பெறவும், உலகில் அமைதி நிலவவும், நான் பிரார்த்தனை மேற்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மேற்கொண்ட வன்முறைகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே, முறையாக மன்னிப்புக் கோரத் தவறிவிட்டார், என சீனா மற்றும் தென் கொரியா நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை விமர்சித்திருந்தன.

இந்நிலையில், பேரரசர் மன்னிப்புக் கேட்டுள்ளது குறிப் பிடத்தக்கது. இதனிடையே, தனது அண்டை நாடுகளுடனான உறவை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும் வகையில், ஜப்பான் அமைச்சரவையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அந்நாட்டில் உள்ள யாசுகுனி சன்னதிக்குச் சென்றனர். ஆனால் இந்த சன் னதியை ஜப்பானின் அண்டை நாடுகள் அதனின் கடந்த கால வன்முறையை நினைவுகொள்ளச் செய்யும் குறியீடாகக் கருது கின்றன.

பேரரசர் அகிஹிடோ இதுவரை அந்த சன்னதிக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x