

பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,328 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,328 ஆக அதிகரித்துள்ளது. 281 பேர் பலியாகியுள்ளனர். 3,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 6,391 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6,391 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை 1,50,756 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரம்ஜானைத் தொடர்ந்து மசூதிகளில் மக்கள் கூடுவார்கள் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த பல நிபந்தனைகளை பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது.
பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று மே மாத இறுதி மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள தொற்றில் 75% சமூகப் பரவல் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 29,95,209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,81,525 பேர் குணமான நிலையில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.