

இஸ்ரேல் தலைநகர் ஜெருச லேமில் ஞாயிற்றுக்கிழமை தன்பாலின சேர்க்கையாளர்கள் சார்பில் பேரணி நடத்தப் பட்டது. இதற்கு யூத மத அடிப்படைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
பேரணி நடைபெற்றபோது அங்கு வந்த யூத அடிப்படை வாதிகள் சிலர் பேரணியில் பங்கேற்றவர்களை தாக்க தொடங்கினர். அப்போது சிரா பான்கி (16) என்ற மாணவி உட்பட 6 பேர் கத்தியால் குத்தப் பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
எனினும் நேற்று சிகிச்சை பலனின்றி சிரா உயிரிழந்தார். இந்த சம்பவம் இஸ்ரேல் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. மத அடிப்படை வாதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.