சுந்தர்பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம் ரூ.2,144 கோடி

சுந்தர்பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம் ரூ.2,144 கோடி

Published on

ஆல்பாபெட் நிறுவனம் கடந்த ஆண்டில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு281 மில்லியன் டாலர் வருமானமாக வழங்கியுள்ளது. இந்திய ரூபாயில் இது 2,144 கோடி ஆகும். இதன் மூலம் உலகிலேயே அதிக ஊதியம் வாங்கும் நிர்வாகிகளில் ஒருவராக சுந்தர்பிச்சை உள்ளார்.

அவருடைய வருமானத்தில் பெரும்பான்மை சதவீதம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பங்குகள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகும். அவருக்கு இப்படியாக கிடைக்கும் ஈவுத்தொகை வருமானம் மட்டுமே ஆல்பாபெட் ஊழியர்களின் மொத்த ஊதிய சராசரியைக் காட்டிலும் 1,085 மடங்கு உயர்ந்துள்ளது.

சுந்தர் பிச்சையின் ஆண்டு ஊதியம் 2019-ல் 6.5 லட்சம் டாலராகஇருந்தது. இது இந்த ஆண்டு 2 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. லாரி பேஜ், செர்கி பிரின் இருவரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து வெளியேறியதை அடுத்துஆல்பாபெட் சிஇஓ பதவி சுந்தர்பிச்சைக்கு வழங்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு சவால்கள் சுந்தர் பிச்சைக்கு முன் உள்ளன. ஏற்கெனவேவேலைவாய்ப்பு, முதலீடு குறித்து சுந்தர் பிச்சை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in