கரோனா வைரஸ் சீனாவிலிருந்து தோன்றியதை நாங்கள் உறுதி செய்வோம்: அமெரிக்கா

கரோனா வைரஸ் சீனாவிலிருந்து தோன்றியதை நாங்கள் உறுதி செய்வோம்: அமெரிக்கா
Updated on
1 min read

சீனாவிலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியதா என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது, “டிசம்பர் மாதமே கரோனா வைரஸ் பற்றி சீனாவுக்குத் தெரிந்திருக்கக் கூடும். சீனாவின் வூஹான் நகரிலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியதா என்பதைப் பிற உலக நாடுகளுக்கு அமெரிக்கா உறுதி செய்யும். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கும், பொருளாதாரச் சரிவுக்கும் உரியவர்கள் பொறுப்பேற்க வேண்டும். உலகப் பொருளாதார அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கரோனா வைரஸ் தொடர்பாக சீனா எந்தத் தகவலையும் மறைக்கவில்லை. எனவே, சீன அரசின் கட்டளைக்குப் பணியும் நாடு போல் அமெரிக்கா அணுகத் தேவையில்லை என்று சீனத் தூதர் லியு சியாமிங் நேற்று தெரிவித்தார்.

கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து பரவியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஆய்வு செய்ய தங்களை சீனா அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரியது. ஆனால், அமெரிக்காவை அனுமதிக்க சீனா மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 9,25,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,217 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in