Last Updated : 25 Apr, 2020 08:37 AM

 

Published : 25 Apr 2020 08:37 AM
Last Updated : 25 Apr 2020 08:37 AM

கலங்கவைக்கும் கரோனா: அமெரிக்காவில் 10 நாட்களில் உயிரிழப்பு இருமடங்காக அதிகரிப்பு; 50 ஆயிரத்தைக் கடந்தது உயிர் பலி

அமெரிக்காவைக் கலங்கடித்து வரும் கரோனா வைரஸால் கடந்த 10 நாட்களில் உயிரிழப்பு இரு மடங்காக அதிரித்துள்ளது. இதுவரை உயிரிழப்பு 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் அமெரிக்காவில்தான் கடுமையான சேத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு உயிரிழப்பும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கரோனா வைரஸுக்கான உயிரிழப்பில் நான்கில் ஒருபகுதி அமெரிக்காவில் நடந்துள்ளது என ஜான் ஹோப்பின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுவரை அமெரிக்காவில் கரோனா வைரஸாஸ் பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணி 9.25 லட்சமாக அதிகரித்துள்ளது. அங்கு நேற்று கூட 38 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பில் இதுவரை 52 ஆயிரம் பேரை கரோனா வைரஸ் காவு வாங்கியுள்ளது. அங்கு நேற்று கரோனா வைரஸுக்கு 1,951 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் உயிரிழப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் (2.19 லட்சம்), இத்தாலி (1.92 லட்சம்), பிரான்ஸ் (1.59லட்சம்), ஜெர்மனி (1.54 லட்சம்), பிரிட்டன்(1.44 லட்சம்), துருக்கி(1.04 லட்சம்) ஆகிய 6 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்தத்தைக் காட்டிலும் அமெரிக்காவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் அதிகரித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 10 லட்சத்தை எட்டிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது நியூயார்க் மாநிலம்தான். அங்கு இதுவரை 2.63 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 21 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஒட்டுமொத்த உயிரிழப்பில் மூன்றில் ஒரு பகுதி நியூயார்க்கில் நடந்துள்ளது.

அதைத் தொடர்ந்து நியூஜெர்ஸியில் 5,426 பேரும், மிச்சிகனில் 2,977 பேரும், மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 2,360 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பும், கரோனாவால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. கடந்த வாரத்தில் நியூயார்க்கில் 38 சதவீதம் பேருக்கு கரோனா பாஸிட்டிவ் இருந்த நிலையில், இந்த வாரம் அது 28 சதவீதமாகக் குறைந்துள்ளது. புதிதாகப் பாதிக்கப்படுவோர் 50 சதவீதம் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. உயிரிழப்பும் 40 சதவீதம் குறைந்துவிட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவிக்கிறது.

அதேபோல லூசியானாவிலும் கரோனாவில் பாதிக்கப்படும் சதவீதம் 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இது தவிர்த்து 18 மாநிலங்களி்ல் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x