கரோனா வைரஸுடன் நீண்ட நாள் இருக்கப் போகிறோம்: ஜெர்மனி அதிபர்

கரோனா வைரஸுடன் நீண்ட நாள் இருக்கப் போகிறோம்: ஜெர்மனி அதிபர்
Updated on
1 min read

நாம் கரோனா வைரஸுடன் நீண்ட நாள் இருக்கப் போகிறோம் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “நாம் இறுதியில் இல்லை. ஆரம்பத்தில் உள்ளோம். நாம் இந்த வைரஸுடன் நீண்ட நாள் இருக்கப் போகிறோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப் பெரிய சவாலை எதிர் கொண்டுள்ளோம்.

நாம் முடிந்த அளவு கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். நாம் ஏற்கெனவே சாதித்ததை இழக்க அனுமதிக்கக் கூடாது. இந்தக் கட்டுப்பாடுகள் சிரமமானவை என்பதை அறிவேன். இது ஜனநாயகத்துக்கான சவால்” என்று தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நாடுகளில் ஜெர்மனி ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியில் மே மற்றும் ஜூன் மாதங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஜெர்மனி கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

ஜெர்மனியில் கரோனா தொற்றுக்கு 1,53,129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,575 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 27, 25,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,718 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in