Last Updated : 24 Apr, 2020 08:13 AM

 

Published : 24 Apr 2020 08:13 AM
Last Updated : 24 Apr 2020 08:13 AM

கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டோம்: அதிபர் ட்ரம்ப் உற்சாகம்

கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டோம். தடூப்பூசிக்கான பரிசோதனை முயற்சிகள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரி்ட்டன், சீனாவில் நடந்து வருகின்றன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உற்சாகமாகத் தெரிவத்தார்

கரோனா வைரஸால் உலகளவில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காதான். அமெரிக்காவில் கரோனா வைரஸால் உயிரிழப்பு 50 ஆயிரத்தை நெருங்கிவிட்டது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கிவிட்டது. இதனால் கரோனா வைரஸின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அங்கு பல்ேவறு மாநிலங்களில் ஊரடங்கு இருந்தபோதிலும் இன்னும் கட்டுக்குள்வரவில்லை அங்கு நேற்று 2,325 பேர்உயிரிழந்தனர்.

கரோனா வைரஸின் பாதிப்பின் தீவிரம் தொடங்கியதிலிருந்தே அமெரிக்கா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியது. அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், வெள்ளை மாளிகையின் கரோனா தடுப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் டெபோரா பிர்க்ஸ் ஆகியோர் கூட்டாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அதிபர் ட்ரம்ப் கூறுகையில் “ கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஏராளமான மிகச்சிறந்த அறிவாளிகள் ஈடுபட்டு வருகிறார்கள். நாம் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டோம்.

இதில் என்ன துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்த மருந்தின் பரிசோதனையின் காலம் தான் அதிகம். பரிசோதனை தொடங்கிவிட்டால் அதற்கு சில காலம் பிடிக்கும் ஆனால், கண்டுபிடித்துவிடுவோம்.” எனத் தெரிவித்தார்

அமெரிக்காவின் தொற்றுநோய் தடுப்பு தலைமை மருத்துவர் அந்தோனி பாஸி முன்பு கூறுகையில் “ கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அந்த பரிசோதனயைின் காலத்துக்கு 12 முதல் 18 மாதங்கள் தேவைப்படும், அப்போதுதான் பரவலாக பயன்படுத்த முடியும். பெரும்பாலான மருத்துவ நிபுணர்களும் 18 மாதங்கள் வரை ஆகும் எனத் தெரிவித்தனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்

துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில் “ கரோனா வைரஸுக்கு எதிராக அமெரிக்கா ெமல்ல மீள்வது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நியூயார்க், நியூஜெர்ஸி, கனெக்ட்கட், டெட்ராய்ட், நியூ ஓர்லீன்ஸ் ஆகிய மாநிலங்களில்தான் இன்னும் உயிர்பலி குறையவில்லை. நாம் தொடர்ந்து கரோனா வைரஸுக்கு எதிராக போராடிவந்தால் நி்ச்சம் கோடை காலம் முடிவுக்குள் நாம் நல்ல நிலைக்கு ேதசத்தை கொண்டுவந்துவிடலாம்.

கரோனா பின்னுக்கு சென்றுவிடும். 16 மாநிலங்கள் விரைவில் பொருளாதார செயல்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளன. இதுவரை 49.3 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. தனியார் ஆய்வகங்களில் ஒரு லட்சம் பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன.

விரைவில் மாநிலங்கள் பொருளாதார வளர்்ச்சிக்காக திறக்கப்பட வேண்டும் என ஊக்கப்படுத்துவோம். இப்போது கரோனா மெதுவாகத்தான் பரவி வருகிறது. பெரும்பாலான பகுதிகளை நாம் பாதுகாத்துவிட்டோம், பல உயிர்களை காப்பாற்றிவிட்டோம். இப்போது அமெரிக்க பொருளாதாரத்தை காக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x