ஃபேஸ்புக்கில் மிகப் பிரபலமான தலைவர் மோடி; நிறைய உரையாடல்களில் ட்ரம்ப் முதலிடம்

ஃபேஸ்புக்கில் மிகப் பிரபலமான தலைவர் மோடி; நிறைய உரையாடல்களில் ட்ரம்ப் முதலிடம்
Updated on
1 min read

ஃபேஸ்புக்கில் மிகப் பிரபலமான உலகத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி மாறியுள்ளார். அவரது தனிப்பட்ட பக்கத்தைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 4.5 கோடி என்ற நிலையில் உள்ளது.

ஃபேஸ்புக்கில் உலகத் தலைவர்கள் என்ற பட்டியலை, பிசிடபுள்யூ என்ற அமைப்பு வெளியிட்டது. இதன்படி, மிகப் பிரபலமானவர்கள் பட்டியலில் மோடி முதலிடத்திலும், 2.7 கோடி லைக்குக்ளுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்திலும், 1.68 கோடி லைக்குகளுடன் ஜோர்டான் நாட்டின் ராணி ரனியா அல் அப்துல்லா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

முன்னதாக, பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு, ட்ரம்ப் முதலிடத்தில் இருந்தார். அதைப் பற்றி பெருமையாகவும் பேசியிருந்தார். "இது உயரிய கவுரம் என்று நினைக்கிறேன் இல்லையா? டொனால்டு ட்ரம்ப் முதலிடத்திலும், பிரதமர் மோடி இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள் என்று மார்க் ஸக்கர்பெர்க் சமீபத்தில் கூறியுள்ளார். மேலும் நான் இரண்டு வாரங்களில் இந்தியா செல்லவிருக்கிறேன்" என்று அவரது உரையில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரம், 30.9 கோடி கமெண்டுகள், லைக்குகள், மற்றும் பகிர்வுகள் என, பயனர்களுடன் உரையாடலைப் பொருத்தவரை ட்ரம்ப் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் பிரேசிலின் அதிபர் ஜேர் போல்ஸோனாரோ இருக்கிறார். மோடி 8.4 கோடி பரஸ்பர உரையாடல்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

கடந்த நான்கு வருடங்களாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த 12 மாதங்களை விட, மார்ச் மாதத்தில், உலக தலைவர்கள் பலரது பக்கங்களில், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in