கரோனா வைரஸ்: 9 நாட்கள் வெண்டிலேட்டரில் கோமாவிலிருந்த நோயாளி: நடையையே மறந்தார்- போராட்டக்காரர்களுக்கு அறிவுரை    

கரோனா வைரஸ்: 9 நாட்கள் வெண்டிலேட்டரில் கோமாவிலிருந்த நோயாளி: நடையையே மறந்தார்- போராட்டக்காரர்களுக்கு அறிவுரை    
Updated on
1 min read

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாநிலத்தில் கரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளி லியா புளூம்பர்க் 9 நாட்கள் வெண்டிலேட்டரில் கோமாவிலிருந்து பிறகு மீண்டுள்ளார். தொண்டையில் ஆக்சிஜனுக்கான டியூப் 9 நாட்கள் இருந்தது.

இவரது தசைகள் மிகவும் பலவீனமடைந்துள்ளன, நடையையே மறந்த இவர் தான் மீண்டும் நடக்கக் கற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவை லாக்டவுனிலிருந்து திறந்து விடுங்கள் என்று ‘அறிவீன’ போராட்டத்தில் குதிப்பவர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக, “அழுது புலம்புவதை நிறுத்துங்கள், புகார் கூறுவதை நிறுத்தங்கள், நம் கவர்னர்கள் நம் ஹெல்த்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள், நீங்கள் ‘வெல்த்’தின் மீது கவனம் செலுத்துகிறீர்கள், இது சீரியஸ்” என்று தெரிவித்துள்ளார்.

இவர் கூறியதை சிஎன்என் ஊடகம் செய்தியாக வெளியிட்டது, ‘நான் மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் நான் 9 நாட்கள் இருந்தேன். வெண்டிலேட்டரில் இந்த வைரஸ் காரணமாக கோமாவுக்குக் கொண்டு செல்லப்பட்டேன். இதுபோக இன்னும் 9 நாட்கள் ஐசியுவில் இருந்தேன். மருந்துகளினால் பெரிய அளவில் மனதில் பிரமைக் காட்சிகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தன.

கிட்டத்தட்ட 14 நாட்கள் படுத்தப் படுக்கையாக இருந்ததில் மீண்டு என்னால் நடக்க முடியவில்லை, நடக்கவே பழக வேண்டியதாயிற்று. நான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம்தான் வீட்டிலேயே இருங்கள், அரசு கொடுக்கும் உதவித்தொகையைப் பயன்படுத்துங்கள்.

குறை கூறுவதை நிறுத்துங்கள், உங்கள் ஆரோக்கியத்துக்கு நன்றியுடன் இருங்கள், விஸ்கான்சின் மாநில கவர்னர் எவர்ஸ் நம் ஹெல்த்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறார் நம் வெல்ததை விடவும் ஆரோக்கியம் தான் அவருக்க்கு முக்கியம்’ என்று அவரது முகநூலை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ளது.

இதற்கு லாக்-டவுன் எதிர்பாளர்களிடமிருந்தே பாராட்டும், சிலரிடமிருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

இவர்களுக்குப் பதில் அளித்த லியா புளூம்பர்க் போராட்டக்காரர்கள் மீது தான் கருணைதான் காட்டுவதாகவும் தனக்கே தான் பார்த்த ரியல் எஸ்டேட் ரிசப்ஷனிஸ்ட் வேலை பறிபோயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்., மேலும் அவர், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் உங்களுக்கு வருமானம் இருக்கப்போவதில்லை. ஆனால் அவசரப்பட்டு திறப்பதன் மூலம் ஆபத்துதான் அதிகரிக்கும்” என்று அவர் போராட்டக்கார்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அமெரிக்காவில் 7,88,900 பேர் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 42,400 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in