Last Updated : 22 Apr, 2020 09:09 AM

 

Published : 22 Apr 2020 09:09 AM
Last Updated : 22 Apr 2020 09:09 AM

கரோனா வைரஸ்: அமெரிக்காவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் சிகிச்சையினால்தான் அதிக மரணங்களா? - திடுக்கிடும் ஆய்வினால் சிகிச்சையில் பின்னடைவு

கரோனா வைரஸ் சிகிச்சையில் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரிகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப் உட்பட பலரும் இதுதான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட அது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது கரோனா நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளினால் மரணமடைந்துள்ளதாக தற்போது அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற பழமொழிக்கு ஏற்ப கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நிலையில் கோவிட்-19 சிகிச்சைகள் சென்று கொண்டிருக்கின்றன.

தன்னுடைய சொந்த வர்த்தக நலன்களுக்காக அதிபர் ட்ரம்ப் எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் இதை பரிந்துரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது, ஹைட்ராக்சிகுளோரோகுய்னால் மரணங்கள் குறித்த அறிக்கையை நான் பார்க்கிறேன் என்கிறாராம் ட்ரம்ப்.

ட்ரம்ப் நிர்வாகம் 30 மில்லியன் டோஸ்கள் ஹைட்ராக்சிகுளோரோகுய்னை ஸ்டாக் செய்து வைத்துள்ளது, இதில் பெருமளவு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை.

“எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லை, சில நல்ல ரிப்போர்ட்களும் உள்ளன, ஆனால் இது நல்ல ரிப்போர்ட் அல்ல, இது தொடர்பாக நாம் ஒருகட்டத்தில் முடிவெடுப்போம்” என்ரு ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதாவது 368 கரோனா தொற்று நோயாளிகளுக்கு அசித்ரோமைசினுடனோ அல்லது இல்லாமலோ ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதாவது ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் கோவிட்-19 நோயாளிகளின் வெண்டிலேட்டர் பயன்பாடுகளைத் தவிர்க்கப் பயன்படுகிறதா என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று ஒரு ஆய்வு நியூ இங்கிலாந்து மருந்து இதழில் வெளியானது.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் என்பதால் நிதி அளிக்கப்பட்டு நடத்திய ஆய்வில், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மூலம்தான் மரண விகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

என்.ஐ.எச். தனது அறிக்கையில், ‘கோவிட்-19 சிகிச்சைக்கான தெரிவுகல் தற்போது ஆய்வுகளில் உள்ளன, ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் அல்லது குளோரோகுய்ன் கோவிட்-19 சிகிச்சையில் பயன்படுத்தலாமா வேண்டாம என்பது பற்றி கிளினிக்கல் தரவுகள் போதாமையாக உள்ளன, குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் அளித்தால் நோயாளியை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து மோசமான விளைவுகள் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளது.

இதனையடுத்து என்.ஐ.எச். நிபுணர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் ஆகியவற்றை சேர்த்து கொடுப்பதை கண்டிக்கின்றனர். ஏனெனில் இதனால் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழக ஆணையர் ஸ்டீபன் எம்.ஹான் , இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்

ட்ரம்ப் மீது பாய்ந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் பாஸ்க்ரெல், ‘கோவிட்-19க்கான சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்பாடு குறித்த ஆய்வறிக்கை ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலாகும், அறிவியலை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவை சந்திக்கிறோம் என்று சாடியுள்ளார்.

ஆதாரங்களின் அடிப்படையிலான விஞ்ஞானமே நெருக்கடியிலிருந்து மீள வழி. நாம் இன்று கொண்டாடும் உலகத்தரம் வாய்ந்த மருந்துகள், மருத்துவர்கள் பலதலைமுறைகளின் சிறந்த பணியாகும் என்கிறார் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்

இந்நிலையில் ஆதாரமில்லாமல் ஹைட்ராக்சிகுளோரோகுயினை ட்ரம்ப் பரிந்துரைத்தது பொறுப்பற்ற செயல், நான் ஏற்கெனவே அமெரிக்க உணவு மருந்துக் கழகத்தை எச்சரித்துள்ளேன், ட்ரம்பின் அரசியல் நெருக்கடிகளுக்கு அடிபணிய வேண்டாம் என்று. அறிவியலை நம்பாமல் அரசியலை நம்பினால் நாம் இன்னமும் தேவையற்ற மரணங்களை சந்திக்க வேண்டியதுதான், வரலாறு நம்மை மன்னிக்காது என்று காங்கிரஸ் உறுப்பினர் பில் பாஸ்க்ரெல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x