

‘‘கரோனா வைரஸ் எப்படி பரவி யது என்பது குறித்து விசா ரணை நடத்த, நிபுணர்கள் குழுவை சீனாவுக்கு அனுப்ப விரும்புகிறோம்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் பரவியது. அதன்பின் உலகளவில் வைரஸ் பரவி விட்டது. இதில் அமெரிக்கா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 7 லட் சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் வைரஸால் பாதிக்கப்பட் டுள்ளனர். 41 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நியூ யார்க் நகரில் மட்டும் 2 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,600 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவியது முதலே சீனா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். கரோனா வைரஸ் குறித்து சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. முன்கூட் டியே உலக நாடுகளை எச்சரிக்க வில்லை என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார். வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் ‘‘கரோனா வைரஸை தெரிந்தே சீனா பரப்பி இருந்தாலும் கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’’ என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
புலனாய்வுத் துறை விசாரணை
இதற்கிடையில், கரோனா வைரஸ் வூஹான் நகரில் இருந்து பரவியதா என்பது குறித்து அமெ ரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று ட்ரம்ப் பகிரங்கமாகக் கூறி னார். இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் கூறியதாவது:
கடந்த டிசம்பர் மாதம் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவியது முதலே சீனா விஷயத்தில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட மற்ற பல விஷயங்களில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், கரோனா வைரஸ் பரவியதில் இருந்து சீனா மீது எனக்கு மகிழ்ச்சி இல்லை.
கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது, என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த சீனாவுக்கு அமெரிக்க நிபுணர்கள் குழுவை அனுப்ப விரும்புகிறேன். இதற்கு சீனா என்ன பதில் அளிக் கப் போகிறது என்பது முக்கியம். பிளேக் தொற்று போல கரோனா வைரஸ் பரவி உள்ளது. சீனாவுக்குள் சென்று விசாரணை நடத்துவது குறித்து நீண்ட நாட்களுக்கு முன்பே அவர்களுடன் (சீனா) நாங்கள் பேசினோம். நாங்கள் சீனாவுக்குள் செல்ல வேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்புகிறோம். ஆனால், எங்களை அவர்கள் அழைக்கவில்லை.
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.