Published : 20 Apr 2020 08:51 AM
Last Updated : 20 Apr 2020 08:51 AM

கரோனா கோரத்தாண்டவம் அதிகரிப்பு- அமெரிக்காவில் ஒரேநாளில் 2,000 பேர் பலி; மரண எண்ணிக்கை 40,661 ஆக அதிகரிப்பு

கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் மரண எண்ணிக்கை ஒரேநாளில் 1,997 ஆக அதிகரித்து மொத்த பலி எண்ணிக்கை 40,661 ஆக அதிகரித்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,997 பேர் மரணம் என்பது முந்தையநாளின் 1,891 மரணங்களை விடவும் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. நியூயார்க்கில் கரோனா உச்ச மரண விகிதம் தணிந்துள்ளது. “உயர்மட்ட மரண விகிதம் தணிந்துள்ளது” என்று நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்தார்
கடந்த புதனனறு அமெரிக்காவில் 24 மணி நேர பலி உச்சத்தை எடி 2,500 பேர் பலியானதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரவு தெரிவித்தது.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 64,265 ஆக உள்ளது. 463 புதிய தொற்றுக்கள் ரிப்போர்ட் ஆகியுள்ளது.

உலகம் முழுதும் கரோனா பாதிப்பு 24, 07,339 என்று அதிகரித்துள்ளது, உலகம் முழுதும் கரோனா பலி எண்ணிக்கை 165,069 ஆக அதிகரித்துள்ளது. 6,25,127 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 20,453 ஆகவும் இத்தாலியில் 23,660 ஆகவும் பிரான்சி 19,718 ஆகவும் பிரிட்டனில் 16,060 ஆகவும் உள்ளது.

சீனாவில் பலி எண்ணிக்கை 4,632 ஆகவும் ஈரானில் 5,118 ஆகவும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x