

சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்துள்ளது, 1.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து கரோனா வைரஸ் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கரோனா வைரஸுக்கு உலகளவில் 22 லட்சத்து 50 ஆயிரத்து757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா ைவராஸா் உயிரிழந்தோர் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 262 ஆக அதிகரி்த்துள்ளது.
அதேசமயம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.71 லட்சமாக உயர்ந்துள்ளது
இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். தொடக்கத்தில் இத்தாலிதான் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்தாலும், இப்போது இத்தாலியைவிட அமெரிக்காவில்தான் அதிகம். அமெரி்க்கவில் இதுவரை 36 ஆயிரம்பேர் உயிரிழந்துள்ளார்கள், 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளா்கள்.
அடுத்ததாக ஸ்பெயினில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், 1.90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 1.72 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்
பிரான்ஸில் இதுவரை 1.47 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் 1.41 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்
பிரிட்டனில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் 14,500 மேலாக அதிகரிகரித்துள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது