

கரோனாவின் இரக்கமற்ற கரங்களில் சிக்கி அமெரிக்கா சொல்லமுடியா துன்பத்தை அனுபவி்த்து வருகிறது. நாள்தோறும் கொத்து கொத்தாக மரணங்கள் நிகழ்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் தொடர்ந்து 2-வது நாளாக 2,535 பேரை கரோனா வைரஸ் காவு வாங்கியுள்ளது.
இதுவரை அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து154 ஆகஅதிகரித்துள்ளது என ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,856 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கரோனவால் உயிரிழந்தோர் என 2,535 பேர் கணக்கிடப்பட்டுள்ளது. மற்றவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த எண்ணிக்கையும் சேர்ந்தால் மோசமானதாக இருக்கும்.
அமெரிக்காவில் நேற்றுமட்டும் 32 ஆயிரம் பேருக்கு கரோனா பாஸி்ட்டிவ் உறுதியானதையடுத்து, ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 9 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தார் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக்கடந்தளுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் இந்த வாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,778ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனால் கடுமையாக பாதிப்பை சந்தித்து வருவது ஐரோப்பிய நாடுகளும், அமெரி்க்கவும்தான். கரோனாவுக்கு உயிழப்பைச் சந்தித்த நாடுகளிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான், அங்கு உயிரிழப்பு 37 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதைத்தொடர்ந்து இத்தாலியில் 22,745பேரும், ஸ்பெயினில் 20 ஆயிரம் ேபரும், பிரான்ஸில் 18,621 பேரும் உயிரிழந்துள்ளனர்.