Published : 17 Apr 2020 03:39 PM
Last Updated : 17 Apr 2020 03:39 PM

முதலில் 2 வயதான தம்பதியினர் காய்ச்சல் என்றுதான் வந்தனர்.. ஆனால் சி.டி.ஸ்கேனில்..: முதன் முதலில் கரோனாவைக் கண்களால் கண்ட சீன மருத்துவர் விவரிப்பு

கரோனாவை முதலில் கண்ட சீன மருத்துவர் ஜாங் ஜிக்சியான்.

ஜாங் ஜிக்சியான் என்ற சீன சுவாசக்குழல் நோய் நிபுணரான யூஹான் நகரைச் சேர்ந்த பெண் மருத்துவர்தான் முதன் முதலில் அப்போது இனம் புரியாத கரோனா வைரஸைக் கண்டுபிடித்தவர் என்று கொண்டாடப்படுபவராவார்.

மனிதகுலத்தை அழிக்கப் புறப்பட்ட கரோனா வைரஸை முதன் முதலில் 2 வயதான தம்பதியினரில் கண்டுபிடித்தவர் இவர்தான். டிசமப்ர் மாதம் சாதாரண ஜுரம் இருமல் என்று வந்த இரண்டு 2 வயதான தம்பதியினரில் முதலில் வைரஸை இனம் கண்ட மருத்துவர் ஜாங் ஜிக்சியான் என்ற இந்த மருத்துவர் தன் அனுபவத்தை சினுவா செய்தி ஏஜென்சிக்குப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த மருத்துவர் கூறும்போது, டிசம்பர் 26ம் தேதி ஹூபேய் மாகாண மருத்துவமனையான ஒருங்கிணைந்த சீன மற்றும் மேற்கத்திய மருந்து மையத்துக்கு 2 வயதான தம்பதியினர் வந்தனர். இவர்களுக்கு காய்ச்சல், இருமல், களைப்பு இவைதான் அறிகுறிகளாக இருந்தன. இது முதலில் ஃப்ளூ காய்ச்சல் அல்லது நிமோனியா என்றே நினைத்தோம்.

ஆனால் சிடி ஸ்கேன் எடுத்தோம், அந்த படங்களில்தான் நிமோனியா, பொதுவான ஃப்ளூ போன்ற வைரஸாக இல்லாமல் வேறு ஒரு தினுசாக இருந்த வைரசைக் கண்டோம். 2003 சார்ஸ் வைரஸ் வெடிப்பின் போதே பணியாற்றிய அனுபவம் இருந்ததால் ஒரு கொள்ளை நோயின் தன்மையிலான ஒரு வைரஸ் இருப்பதை அறிந்தேன் உடனே அவர்கள் மகனை அழைத்தேன். மகனுக்கும் சிடி ஸ்கேன் எடுத்தேன்.

முதலில் தன்னை சோதிக்கக் கூடாது என்று மகன் எதிர்த்தார். காரணம் அவருக்கு ஒன்றுமேயில்லை நாங்கள் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சிப்பதாகவே அவர் நினைத்தார். ஆனால் சிடி ஸ்கேனில் வயதான அந்தத் தம்பதியினருக்குக் காட்டிய அதே நுரையீரல் பிரச்சினைகளை மகனுக்கும் காட்டியது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு வருகிறது என்றால் அது தொற்று நோயாகவே இருக்க வேண்டும். டிச.27ம் தேதி இன்னொரு நோயாளியும் இருமல், காய்ச்சல் என்று வந்தவருக்கு சிடி ஸ்கேனில் அதே நுரையீரல் பிரச்சினைகள் தெரிந்தன.

இந்த நால்வரின் ரத்த மாதிரிகளும் வைரஸ் இருப்பதை உறுதி செய்தது. அந்த நாளே மருத்துவமனைக்கும் மாவட்ட நோய்க்கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுக்கு ரிப்போர்ட் ஒன்றை அனுப்பி, தொற்று நோய் அபாயம் என்று அதில் எச்சரித்திருந்தேன்” என்றார்.

ஆனால் இது இவ்வளவு பெரிய மனித குல அழிப்பு வைரஸ் என்பதை மருத்துவர் ஜாங் ஜிக்சியான் அறிந்திருக்கவில்லை. இந்த ரிப்போர்ட்டை அனுப்பிய பிறகு மருத்துவமனையில் இந்த நால்வர் இருந்த அறை தனிமைப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அவர்களை அணுகும் மருத்துவ உதவியாளர்களுக்கு காப்புக் கருவிகள் அளிக்கப்பட்டன.

அடுத்தடுத்த நாட்களில் மேலும் 3 பேர் இதே நோய் அறிகுறிகளுடன் வந்து சிடி ஸ்கேனில் நுரையீரல் பிரச்சினை இருப்பது தெரியவர பெரிய அளவில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. டிசம்பர் 29ம் தேதி 7 பேர் சிகிச்சை குறித்து 10 நிபுணர்கள் ஆலோசித்தனர்.

அதன் பிறகு வூஹானில் உள்ள தொற்று நோய்க்கான சிறப்பு மருத்துவமனைக்கு 7 நோயாளிகளில் 6 பேர் அனுப்பப்பட்டனர். டிசம்பர் 30,ம் தேதியே சீனாவின் வூஹானிலிருந்து வைரஸ் வெடிப்பு பற்றிய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது. டிசம்பர் 31ம் தேதி 27 கேஸ்கள் காரணம் புரியாத நிமோனியா கேஸ்களாக மாற பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வூஹானில் அதிகாரிகல் உத்தரவிட்டனர்.

கோவிட்-19 காய்ச்சலை முதன் முதலில் கண்டுபிடித்து எச்சரித்த ஜாங் ஜிக்சியானுக்கு அவருக்குரிய மரியாதை செய்து அங்கீகரித்தது.

ஆனால் அவரோ, ‘நான் ஒரு தொழில்பூர்வமான மருத்துவராக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தேன்’ என்கிறார் தன்னடக்கத்துடன் ஜாங் ஜிக்சியான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x