

அமெரிக்காவில் இயங்கி வரும் லாப-நோக்கல்லாத சீக்கிய அமைப்பு ஒன்று 6 நாடுகளில் சுமார் 10 லட்சம் பேர்களுக்கு இலவசமாக உணவு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அவசரகால உதவி குழுக்களை உருவாக்கி தேவையுள்ள குடும்பங்களுக்கு இந்த யுனைடெட் சீக்கிய அமைப்பு இந்தியா, பிரிட்ட, மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் சுமார் 10 லட்சம் பேர்களுக்கு இலவச உணவு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஐக்கிய சீக்கியர்கள் அமைப்பு கலிபோர்னிஅய, வாஷிங்டன், உதா, மேரிலேண்ட் ஆகிய பகுதி மக்களுக்கு உதவியுள்ளது.. நியூயார்க்கில் மட்டும் 30,000 பேருக்கு உணவு தயாரித்து வழங்கியுள்ளது
அமெரிகாவின் கரோனா வைரஸ் முதல் ஹாட்ஸ்பாட்டனா சியாட்டிலிலில் ஐக்கிய சீக்கியர்கள் அமைப்பு சுகாதாரப் பணியாளர்களை களத்தில் இறக்கியது. குடியிருப்பு வாசிகளுக்கு கரோனா சோதனை மற்றும் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கும் சேவைகளை வழங்கியுள்ளது. இதற்கு சில நாட்கள் சென்று ஹூஸ்டன், டெக்சாஸ் குடும்பங்கள் இவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஐக்கிய சீக்கிய அமைப்பு மட்டும் மளிகைச் சாமான்களை அளிக்கவில்லை எனில் பட்டினியில் வாடியிருப்போம் என்கின்றனர் ஹூஸ்டன்வாசிகள்.
அதே போல் பிரிட்டனிலும் ரஸல் ஹால் மருத்துவமனையிலும் ரொட்டி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை விநியோகித்துள்ளது அமெரிக்காவின் ஐக்கிய சீக்கிய அமைப்பு
கனடாவில் முதியோர் உள்ள குடும்பங்களுக்காக உணவு வங்கிகள் மற்றும் மளிகைச் சாமான்கள், சுகாதாரப் பொருட்களை வழங்கியுள்ளனர்.