Last Updated : 15 Apr, 2020 09:28 AM

 

Published : 15 Apr 2020 09:28 AM
Last Updated : 15 Apr 2020 09:28 AM

15,000-த்திற்கும் அதிகமானோர் பலி; கரோனா கோரத்தாண்டவ பாதிப்பில் 4வது நாடு: மீண்டும் அதிகரிக்கும் பலிகளும் தொற்றுக்களும்

கரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தினால் பாதிக்கப்பட்டு 15,000த்திற்கும் அதிகமானோர் பலியான நாடுகளில் 4வதாக பிரான்ஸ் இணைந்துள்ளது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பெரிதும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் விளங்குகிறது.

ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 6821-லிருந்து 6730 ஆகக் குறைந்துள்ளது. திங்களன்று லாக்-டவுனை அதிபர் எமானுயெல் மேக்ரான் மே 11 வரை நீட்டித்தார்.

பிரான்ஸ் மருத்துவமனைகளில் மரணங்கள் 5% அதிகரித்து 15,729 ஆக கூடியுள்ளது என்று பொதுச்சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார்.

அதே போல் உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்று எண்ணிக்கை 5.3% அதிகரித்து மொத்தம் 103, 573 ஆக உள்ளது. அதாவது ஞாயிறன்று 1.7%, திங்களன்று 2/8% அதிகரிப்பு என்பதிலிருந்து 5.3% ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு கணக்கீடுகளிலிருந்து பார்த்தால் பிரான்ஸ் மக்கள் தொகையில் 5-10% மக்களுக்கு கரோனா பாதிப்பு தொற்றியிருக்கலாம் என்று அச்சப்படுவதாக ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x