

ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 567 பேர் பலியாகியுள்ளதாகவும் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹோப்கின்ஸ் கூறும்போது, “ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் 567 பேர் கரோனா வைரஸ் தாக்குதலால் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஸ்பெயினில் கரோனா வைரஸ் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 17,756 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினில் கரோனா வைரஸுக்கு 1,69,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயினில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களி எண்ணிக்கை குறைந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று கணிசமான அளவு கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 19,25,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,718 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.