

இந்தியாவுக்கு 155 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இலகு எடை டார்பெடோக்கள், மற்றும் ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி சுமார் 23,644 பேர் மரணமடைந்துள்ளனர் உலகிலேயே மிக அதிகம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 10 ஏஜிஎம்-84-எல் ரக ஹார்பூன் பிளாக் 2 ஏவுகணைகள், இதன் விலை 92 மில்லியன் அமெரிக்க டாலர்கள், 16 எம்கெ லைட் வெய்ட் டார்பெடோக்கள் உட்பட 63 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தடவாளங்கள் மொத்தம் 155 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுத ஏற்றுமதிக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
இந்திய அரசு மேற்கோண்ட தேவைக் கோரிக்கையை அடுத்து இதனை வெளியிட்டுள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது. ஹார்பூன் ஏவுகணைகள் பி-81 போர் விமானத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு முக்கியமான கடற்பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுவது, இதனை இந்தியா பிராந்திய அச்சுறுத்தலுகு எதிராகப் பயன்படுத்தி தன் சொந்த நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்று விற்பனைக்கு நியாயம் வழங்கியுள்ளது பெண்டகன்.
ஹார்பூன் ஏவுகணைகளை போயிங் நிறுவனம் தயரிக்கும், டார்பெடோக்களை ரேதியான் நிறுவனம் அளிக்கும் என்று அமெரிக்க காங்கிரஸ் அறிவிக்கை தெரிவிக்கிறது.
கரோனா வைரஸ் லாக்-டவுன் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க நிதிச்சலுகைகளை எதையும் அதிகரிக்கவில்லை, நீட்டிக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடி வரும் நிலையில் பெண்டகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.