

அமெரிக்காவில் ஒன்றரை வயது குழந்தையின் இறப்புக்கு காரணமாக இருந்த அதன் பராமரிப்பாளரான இந்திய பெண்ணுக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூஹெவன் பகுதியைச் சேர்ந்த இந்திய தம்பதி சிவகுமார் மணி, தேன்மொழியின் குழந்தை அதியன். குழந்தையை பராமரிக்க கின்ஜல் படேல் (29) என்ற இந்திய பெண்ணை அத்தம்பதி பணிக்கு அமர்த்தியிருந்தனர். கடந்த 2014 ஜனவரியில் அக்குழந்தை காயங்களுடன் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தது.
இதில் குழந் தையின் பராமரிப்பாளர் கின்ஜலின் அலட்சியமே இறப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கின்ஜலுக்கு அமெரிக்கக் குடியுரிமை இல்லாததால் தண்டனைக் காலம் முடிவடைந் ததும் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார் என அவருடைய வழக்கறிஞர் தெரிவித்தார்.
குழந்தை உடலில் காயங்கள் ஏற்பட காரணமாக இருந்தது, விசாரணையின் போது அதிகாரியிடம் பொய் கூறியது உள்ளிட்ட குற்றங்கள் காரணமாக இறந்த குழந்தையின் தந்தை சிவகுமார், தாய் தேன்மொழி ஆகியோர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.