Published : 12 Apr 2020 10:14 AM
Last Updated : 12 Apr 2020 10:14 AM

அதிகரிக்கும் கரோனா துயரம்: ஒய்வு  இல்லாமல் சவப்பெட்டிகள் தயாரிப்பு- பிரான்சில் வேதனை 

கரோனா வைரஸின் கோரத்தாண்டவம் ஐரோப்பிய நாடுகளை விழிபிதுங்கச் செய்யும் நிலையில் மரண விகித அதிகரிப்பால் சவப்பெட்டி தொழில்கள் கால நேரம் பாராது ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் சவப்பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

ஐரோபாவின் மிகப்பெரிய சவப்பெட்டி தயாரிப்பு நிறுவனமான கிழக்கு பிரான்சில் உள்ள ஓஜிஎஃப் நிறுவனத்தில் பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றி சவப்பெட்டியை தயாரித்து வருகின்றனர்.

நோய் தொற்று காரணமாக மொத்தம் 4 மாடல்களில் மட்டுமே சவப்பெட்டியை உருவாக்குவதாக தொழிற்சாலை இயக்குநர் இமானுயெல் காரெட் தெரிவித்தார், பொதுவாக 15 வகையான சவப்பெட்டிகள் உள்ளன என்கிறார் அவர்.

நாளொன்று 410 சவப்பெட்டி தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். சிலர் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வந்து பணியாற்றுகின்றனர்.

உலகம் முழுதும் 17,80,356 பேர் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 108,828 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 4 லட்சத்து 4 ஆயிரத்து 32 பேர் குணமடைந்துள்ளனர்.

பிரான்சில் மொத்த பாதிப்பு 129, 654, பலி எண்ணிக்கை 13,832 என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை.யின் கரோனா தடம் காண்டும் தரவுகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x