தெற்கு சூடான் போரில் 9,000 குழந்தைப் போராளிகள்: ஐ.நா.

தெற்கு சூடான் போரில் 9,000 குழந்தைப் போராளிகள்: ஐ.நா.
Updated on
1 min read

தெற்கு சூடானில் அரசுக்கும் போராளிக் குழுவுக்கும் இடையில் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் போரில் 9,000க்கும் அதிமான குழந்தைப் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை கூறியுள்ளார்.

தெற்கு சூடானில் தின்கா மற்றும் நுவெர் எனும் இரு இனக்குழுக்கள் இருக் கின்றன. தற்போது, தெற்கு சூடானை ஆட்சி புரிவது தின்கா இனக்குழு ஆகும். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த இரண்டு இனக்குழுக்களுக்கும் இடையே சண்டை மூண்டது.

அரசுக்கும், போராளிக் குழுவுக்கும் இடையிலான இந்தப் போர் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வருகிறது.

போர் பகுதிகளில் ஆய்வு

சமீபத்தில், மூன்று நாள் பயணமாக இந்த நாட்டுக்குச் சென்றிருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை போர் நடைபெறும் பகுதிகளை ஆராய்ந்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் கூறுகை யில், "இந்தப் போரில் 9,000க்கும் அதிகமான சிறார்கள் இரண்டு பக்கத்திலும், ஆயுதங்கள் ஏந்திப் போராட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனால் இரண்டு தரப்புமே குற்றவாளிகள்தான்" என்றார் அவர்.

மேலும் அவர், "போரினால் நாட்டில் நிலவும் பட்டினியைப் பற்றி இரண்டு பக்கத் தலைவர்களும் கவலை கொள் ளாமல் இருப்பதைக் கண்டு நான் திகைக்கிறேன்.

தங்களின் தனிப்பட்ட தோல்விகளை பரஸ்பரம் அமைதியாகத் தீர்க் காமல், போரில் ஈடுபடுவதால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பட்டினிக்கு ஆளா கிறார்கள்" என்றார்.

கோடிக்கு மேற்பட்டோர் பாதிப்பு

இந்தப் போரில் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தங்கள் வீடு களைவிட்டு புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இதுகுறித்து ஐ.நா. தெற்கு சூடானை எச்சரித்தாலும் அதைப் பற்றி அந்த அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

"கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக இரண்டு பக்கத்திலிருந்தும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை அவர்களால் நிறைவேற்ற முடியாமல், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்றார் நவி பிள்ளை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in