Published : 09 Apr 2020 07:22 PM
Last Updated : 09 Apr 2020 07:22 PM

நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்: கரோனாவிலிருந்து  மீண்ட பெண்ணின் அனுபவம்

நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன் என்று நினைத்துவிட்டேன். நான் சுவாசிப்பதற்கு அவ்வளவு சிரமம் அடைந்தேன் என்கிறார் லண்டனில் வசிந்து வரும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவரான ரியா லங்கானி.

உலகம் முழுவதும் கரோனா வைரஸலிருந்து 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் லண்டன் வசித்து வரும் ரியா லங்கானி.

கரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ள ரியா தற்போது தனது இல்லத்தில் தொடர்ந்து தனித்து இருப்பதையே பின்பற்றி வருகிறார். இந்த நிலையில் கரோனா வைரஸிலிருந்து மீண்ட அனுபவத்தை ரியா தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பகிர்ந்து கொண்டார்.

அதில் ரியா கூறுகையில் “நான் இன்னும் எனது கணவர் அருகிலோ எனது பெற்றோர் அருகிலோ கூட செல்லவில்லை. இரவில் உறங்குகையில் சுவாசிப்பதில் இன்னும் எனக்குச் சிக்கல் உள்ளது. கரோனா தொற்று இருக்கும்போது நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன் என்று நினைத்தேன். எனக்கு சுவாசிப்பதில் அவ்வளவு சிரமம் இருந்தது.

அந்தத் தருணத்தில் எனது குடும்பத்தினருக்கு செய்தி அனுப்ப முடியாத நிலையில் இருந்தேன். ஆனால் தற்போது நான் உயிருடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் ரியா நன்றி தெரிவித்தார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு சுமார் 15,11,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 88,338 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x