Published : 09 Apr 2020 12:16 PM
Last Updated : 09 Apr 2020 12:16 PM

அமெரிக்கா சிகாகோவில் உள்ள ஒரு சிறையில் கரோனா வைரஸ் கோரத்தாண்டவம்

கரோனாவின் பிடியில் சிக்கி செய்வதறியாது திகைத்து வரும் அமெரிக்காவில் சிகாகோவில் ஒரு சிறையில் மட்டுமே 400 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

அமெரிக்காவிலேயே ஒரே சிறையில் வைரஸ் பாதிப்பு அதிக அள்வில் ஏற்பட்டுள்ளது இந்த சிறையில்தான்.

251 கைதிகள் மற்றும் 150 சிறை ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைதிகளில் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் குணமடையும் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு கைதியை கரோனா பலி வாங்கியுள்ளது என்று ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இந்தச் சிறையில் சுமார் 4,700 கைதிகள் உள்ளனர், பெரும்பாலோனோர் ஆப்பிரிக்க அமெரிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள். விசாரணைக் கைதிகள் பலர் ஸ்க்ரீன் செய்யப்பட்டு இவர்களி வன்முறை குணமற்றவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கவில் கரோனா வைரஸுக்கு 14, 797 பேர் மரணமடைந்துள்ளனர்.

கரோனாவுக்க்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 435,160 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x