Last Updated : 08 Apr, 2020 09:27 AM

 

Published : 08 Apr 2020 09:27 AM
Last Updated : 08 Apr 2020 09:27 AM

அமெரிக்காவில் கரோனா வைரஸால் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? புதிய தகவல்கள்

கோப்புப்படம்

வாஷிங்டன்

அமெரி்க்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸால், அங்குள்ள வெள்ளையின மக்கள்தான் அதிகமான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள் என்று நினைத்திருந்தநிலையில் அவர்களைவிட அதிகமாக பாதிக்கப்பட்டது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்தான் எனத் தெரிவியவந்துள்ளது.

அமெரிக்காவில் கரோனா வைரஸின் பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 1,970 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது, 33 ஆயிரம் பேருக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதிபர் ட்ரம்ப்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த பெருந்தொற்று நோயிலிருந்து நாட்டை மீட்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இருப்பினும் கரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் இன வேறுபாடின்றி அனைவரின் மீது தனது கோரப்பிடியை செலுத்தினாலும், அதிகமான பாதிப்புக்கு ஆளாகி இருப்பது அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க-அமெரிக்க கருப்பரின மக்கள்தான் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “ கரோனா வைரஸுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது, அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் இதில் அதிகமாக பாதி்க்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களுக்கு போதுமான உதவிகளை அளித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்

அமெரிக்காவின் தேசிய தொற்றுநோய் மற்றும் ஒவ்வாமை நோய் அமைப்பின் இயக்குநர் அந்தோனி பாஸி கூறுகையில், “ கரோனா வைரஸுக்கு மட்டுமல்ல பாரம்பரிய நோய்களான நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, உடல்பருமன், ஆஸ்துமா போன்றவற்றுக்கு அதிகமாக பாதிக்கப்படுவது ஆப்பிரிக்க மக்கள்தான்.

ஆனால் துரதிர்ஷ்டமாக கரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டு, ஐசியுவில் சிகிச்சை பெறுபவர்களும், செயற்கை சுவாசம் தேவைப்படுவோர்களையும் கணக்கில் எடுத்தால் அது ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்

அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு அதிகமான அளவில் நோய் பாதிப்பையும் , உயிரிழப்பையும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்(கறுப்பினத்தவர்கள்) பாதிக்கப்பட காரணம் என்ன? இந்த கேள்விக்கு வல்லுநர்கள் கூறும் விளக்கத்தின்டி, “ அமெரி்்க்காவில் வாழும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இன்னும் அங்கு வறுமையான சூழலில், மோசமான உடல்நலத்துடன் வாழ்ந்து வருவது, மருத்து சிகிச்சை அளிப்பதில்கூட இனவேற்றுமை, அவர்கள் பணியாற்றும் சூழல், அதிகமான அளவில் ேவலைக்குச்செல்வது” போன்றவை காரணங்களாகக் கூறப்படுகிறது”

அமெரிக்க அரசின் தலைமை மருத்துவர், அறுவைசிகிச்சை நிபுணர் ஜெனரல் ஜெரோம் ஆடம்ஸ் கூறுைகயில், “ கறுப்பின மக்களுக்குத்தான் அதிமான நீரிழிவு நோய், நுரையீரல் நோய், இதயக்கோளாறு அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வறுமையின் காரணாக மோசமாக உடல்நலத்தைப் பேணுவது, இன்னும் இனவேறுபாட்டுடன் மருத்துவ சிகிச்சை கிடைப்பது போன்றவை கரோனா வைரஸால் அதிகமாக பாதி்க்கப்பட காரணங்களாகும். கரோனா வைரஸுக்கு நீரிழிவு, இதயநோய், நுரையீல் நோய் இருப்பவர்கள் அதிவேகமாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் கறுப்பின மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்

நான் கூட கறுப்பினத்தவன்தான், எனக்கும் உயர்ரத்த அழுத்தமும், ஆஸ்துமாவும் இருக்கிறது, வறுமையான சூழலில் வளர்ந்துதான் இந்த நிலைக்கு உயர்ந்தேன். இதுபோன்ற காரணங்கள்தான் கரோனா வைரஸுக்கு கறுப்பின அமெரிக்கர்கள் அதிகமாக உயிரிழக்கவும், பாதிக்கப்படவும் காரணமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்

சிகாகோ நகரில் 30 சதவீதம் கறுப்பின மக்கள் வாழ்கிறார்கள். இதுவரை கரோனா வைரஸால் அந்த நகரில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் 68 சதவீதம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்தான் பலியாகியுள்ளார்கள்.

சிகாகோ நகரில் மட்டுமல்ல, நார்த் கரோலினா, லூசியானா, மிச்சிகன், விஸ்கான்சின், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் நடந்த உயிரிழப்புகளிலும், பாதிக்கப்பட்டதிலும் குறிப்பிடத்தகுந்த விகிதாச்சாரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள்தான் இருக்கிறார்கள்.

அமெரிக்க பொதுசுகதாரத்துறை அமைப்பின் இயக்குநர் மருத்துவர் ஜார்ஜ் பெஞ்சமின் கூறுகையில் “ கரோனா வைரஸுக்கு அதிகமாக ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் பாதிக்கப்படுவது, உயிரிழப்பது என்பது சமூகப்பிரச்சினை தொடர்பானது, தொற்றுநோய் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புள்ள அத்தியாவசியப் பணிகளில் இன்னும் கறுப்பின மக்கள்தான் இருக்கிறார்கள்.

பேருந்து ஓட்டுநர்களாக, துப்புரவு தொழிலாளர்கள், செவிலியர்களாக, மளிகைக்கடை, ஷாப்பிங் மால்களில் உதவியாளர்கள் போன்ற மக்களுடன் அதிகமாக தொடர்புள்ள பணிகளில் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் அதிகம் ஈடுபடுவதால் பாதிப்பும் தீவிரமாக இருக்கிறது.

இதைக்காட்டிலும் முக்கியமானது இன்னும் ஆப்பிரிக்க மக்களுக்கு மருத்துவ சிகிச்சை, சேவை கிடைப்பதி்ல் மறைமுகமான, வெளிப்படையான பாகுபாடுகள் பின்பற்றப்படுவது அவர்கள் கரோனா வைரஸுக்கு அதிகம் பாதிக்கப்பட காரணம்.

மருத்துவக் காப்பீடு இருப்பவர்கள் மட்டும்தான் மருத்துவமனைகளில் நல்ல சிகிச்சை அளிக்கப்படுகிறது, ஆனால் ஆப்பிரிக்க மக்களுக்கு போதுமான அளவில் இல்லாததால் அவர்களுக்கு சிகிச்சைஅளிப்பதிலும் பாகுபாடு நிலவுகிறது.

ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே அதிக அளவில் இதயநோய், புற்றுநோய், உடல்பருமன், நீரிழிவு போன்றவை இருக்கிறது. கரோனா வைரஸ் இவர்களைத் தாக்கும் போது இவர்களுக்கு தரமான சிகி்ச்சை கிடைப்பதிலும் இருக்கும் பாகுபாட்டால் அதிகமான பாதிப்பை சந்திக்கிறார்கள்” எனத்தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x