Published : 07 Apr 2020 07:35 AM
Last Updated : 07 Apr 2020 07:35 AM

நல்ல செய்தி:  2019 டிசம்பர் முதல் முதன்முறையாக சீனாவில் கரோனா மரணம் இல்லாத நாள்

செவ்வாயன்று சீனா தெரிவிக்கும்போது, முதல் முறையாக கரோனா வைரஸ் தொற்று பாதித்து மரணம் இல்லாத முதல் தினமாக அமைந்தது என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கரோனா மையமாக முதன் முதலில் திகழ்ந்த சீனாவில் மார்ச் முதல் கரோனா தொற்று குறையத் தொடங்கியது. ஆனால் அயல்நாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் தொற்று மீண்டும் இரண்டாம் அலையாக பரவத் தொடங்கியது. இந்த வகையில் சுமார் 1000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் 32 கரோனா கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இவை அனைத்தும் இறக்குமதி ஆனதுதான் என்று சீன சுகாதார ஆணையம் தெரிவித்தது.

மேலும் நோய்க்குறி குணங்கள் இல்லாத 30 புதிய கேஸ்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் சீனா நோக்குறி குணங்கள் இல்லாத கேஸ்களை முதல் முறையாக வெளியிடத்தொடங்கியதன் காரணம் குறிகுணங்கள் இல்லாமல் அமைதியாக கரோனாவைச் சுமந்து செல்பவர்கள் குறித்த கவலை உலகெங்கும் பரவத் தொடங்கியதே.

வூஹானில் எதிர்கால கரோனா வைரஸ் மறு எழுச்சி ஏற்படலாம் என்ற அச்சமும் அங்கு உள்ளது. இங்குதான் முதன் முதலாக கடந்த ஆண்டு இந்த கொலைகார வைரஸ் உருவானது.

இன்று வரையும் கூட சீனாவில் 81,740 பேர் வைரஸுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,331 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். இந்த மரணங்களிலும் பெரும்பாலும் வூஹான் மற்றும் ஹூபே மாகாணத்தைச் சுற்றித்தனநிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் உலக அளவில் கரோனா மரணம் 70,000-த்தைக் கடந்துள்ளது, குறிப்பிடத்தக்கது, ஐரோப்பா, அமெரிக்கா அதிக மரணங்களைச் சந்தித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x