

ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் 7,026 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் 7,026 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 809 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் ஸ்பெயினில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 11,744 பேர். மேலும் 6,500 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் கரோனா தொற்றுக்கு சுமார் 1,19,199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 190 நாடுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 11,17,860 பேர் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 59,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸுக்கு அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.