

ஏற்கெனவே ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மற்றும் அசித்ரோமைசின் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அதனால் சிலர் இறந்து சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடும் விமர்சனங்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க பெடரல் மருத்துவக் கழகம் ஹைட்ராக்சிகுளோரோகுய்னை கோவிட்-19 காய்ச்சலுக்கு பயன்படுத்த அனுமதியளித்ததையடுத்து இது நல்ல பலன்கள் தருவதாகத் தோன்றுகிறது என்று ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில், “நாம் தொடர்ந்து ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மற்றும் பிற சிகிச்சைகளின் திறனை தொடர்ந்து ஆய்வு செய்வோம். இது குறித்து அமெரிக்க மக்களுக்கு அவ்வப்போது தகவல்களும் தெரிவிக்கப்பட வேண்டும்" என்றார்.
இதனையடுத்து லட்சக்கணக்கில் ஹைட்ராக்சிகுளோரோககுய்னை அமெரிக்கா பெரிய அளவில் ஸ்டாக் செய்து வருகிறது.
ஆனால் இன்னமும் ஆய்வு நிலையில் உள்ள இந்த விஷயத்தை முடிந்த முடிவாக அறிவிப்பது ஆபத்தையே விளைவிக்கும் என்று வெள்ளைமாளிகை பணிக்குழுவின் முதன்மை உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
கோவிட்-19 நோயிலிருந்து மிண்ட ஒருவர் வெள்ளிக்கிழமையன்று ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் காரணம் என்று கூறியதையடுத்து இந்த சொல்லாடல் அங்கு மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் மட்டுமல்ல எந்த ஒரு வைரஸின் தாக்கமும் அதன் பரவல் வித்தியாசம், தொற்று வித்தியாசத்துடன் ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு மாதிரியான செயல்களை நிகழ்த்தும் என்பதால் ஒருவருக்கு பயன்படும் சிகிச்சை மற்றவருக்கு பயனளிக்குமா என்பது ஆய்வுக்குரியதே என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இது ஆட்டோ-இம்யூன் டிசீஸ் என்று அழைக்கப்படும் நோய் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் நோய்களில் ஒன்றான முடக்குவாத நோய்க்கு அளிக்கப்படும் மருந்தாகும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் தற்போது கோவிட்-19 கேஸ்களுக்கு இதனைப் பயன்படுத்தத் தொடங்கினால் இதனைப்பயன்படுத்தி வரும் முதியோர்களுக்கு அந்த மாத்திரைகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாகவும் சிலர் எச்சரித்துள்ளனர்.