நம்பிக்கை ஒளி வந்தும் பலி குறையவில்லை: இத்தாலியில்  ஒரே நாளில் 766 பேர் உயிரிழப்பு;15 ஆயிரத்தை நெருங்குகிறது

நம்பிக்கை ஒளி வந்தும் பலி குறையவில்லை: இத்தாலியில்  ஒரே நாளில் 766 பேர் உயிரிழப்பு;15 ஆயிரத்தை நெருங்குகிறது
Updated on
1 min read


கரோனா வைரஸின் கோர தாண்டவத்தால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் நம்பிக்கை ஒளி வந்தபோதிலும், நாள்தோறும் பலியாகும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை.

ஒரேநாளில் கரோனா வைரஸுக்கு 766 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 681 ஆக அதிகரித்து 15 ஆயிரத்தை நெருங்குகிறது.

ஆனால், இந்த பலி, பாதிப்புக்கு மத்தியில் இத்தாலிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கரோனா வைரஸிலிருந்து 19 ஆயிரத்து 758 பேர் குணமடைந்துள்ளார்கள். கடந்த 48 மணிேநரத்தில் குணமடைந்தோர் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து 4 ஆயிரத்து585 ஆகக் குறைந்துள்ளது. கரோனா வைரஸால் சிக்கி சீரழிந்த இத்தாலிக்கு இது நம்பிக்கை ஒளி ஊட்டும் விஷயமாகும்.

ஓட்டுமொத்தமாக இத்தாலியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 19ஆயிரத்து827 ஆக அதிகரித்துள்ளது. 85 ஆயிரத்து 388 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாலியில் மோசமாக பாதிக்கப்பட்ட லோம்பார்டி மண்டலத்தில்தான் பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்தன, இப்போது அங்கும் உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது

இதுகுறித்து லோம்பார்டி மண்டலத்தின் தலைமை மருத்துவ அதிகாரி ஜியுலே கலேரா கூறுகையில் “ கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது, பாதிப்பும் குறைந்து வருகிறது, இப்போதுதான் நாங்கள் மெல்ல நிம்மதி மூச்சுவிடத் தொடங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்

இத்தாலியில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தவுடன் மருத்துவமனை, மருந்தகங்கள் தவிர அனைத்தையும் மூடகடந்த மாதம் 12-ம் தேதி உத்தரவிட்டது. இதுபோன்ற ஐரோப்பாவில் முதன்முதலாக இத்தாலிதான் உத்தரவிட்டது. மேலும் ஏப்ரல் 13-ம் தேதி வரை மக்கள் பொது இடங்களில் கூடவும் தடைவிதித்தது இத்தாலி அரசு என்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in