

இந்தோனேஷியாவில் 54 பேருடன் புறப்பட்ட உள்நாட்டு பயணிகள் விமானம் காணவில்லை. அந்த விமானம், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிரிகானா ஏர் சேர்விஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம், பப்புவா மாகாணத்தில் ஜெயபுராவில் இருந்து ஒக்ஸிபில் நகருக்குச் சென்றுகொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விமானத்தைத் தேடும் பணிகள் நடந்துவருவதாக இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது.
விமானம் சென்ற மலைப் பகுதியில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக தேடுதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.