

கரோனா வைரஸுக்கு பெரிய அளவில் பயங்கர பாதிப்பைச் சந்தித்து வரும் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 3,899 ஆக அதிகரித்துள்ளது. 9/11 இரட்டைக் கோபுரத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2,977, தற்போது கரோனா பலி எண்ணிக்கை அதையும் கடந்தது.
டொனால்ட் ட்ரம்ப், “இது மிகவும் வலிநிறைந்த, மிக மிக வலிநிறைந்த 2 வாரக் காலக்கட்டமாகும்” என்று கோவிட்-19 நிலவரம் குறித்து அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 865 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 1,88,547 ஆக அதிகரித்துள்ளது
வைரஸ் மையமாகத் திகழும் நியூயார்க் நகரத்தில் 1096 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். நகரத்துக்கு வெளியே உள்ள மருத்துவமனை மார்ச்சுவரிகளில் இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்க போதிய இடமில்லை. குளிர்பதன ட்ரக்குகளில் வைக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள இடுகாடுகளிலும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக நியூயார்க் இறுதிச் சடங்கு இயக்குநர்கல் கூட்டமைப்பு அதிகாரி மைகெ லனோட்டஸ் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி செய்தித் தொடர்பாளர் நான்சி பெலோஸி அதிபர் ட்ரம்ப் மந்தமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார், அவர் தன் பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தைப் பயன்படுத்தி நிறுவனங்கள் உடனடியாக கரோனா தடுப்பு உபகரணங்களை தயாரிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியுமோ கூறும்போது, நியூயார்க் மாநிலத்துக்குத் தேவை 30,000 வெண்ட்டிலேட்டர்கள் என்கிறார். ஆனால் பெடரல் அரசு 4000 மட்டுமே வழங்குகிறது என்றார்.
மத்திய கொள்முதல் திட்டத்தைக் கொண்டு வராமல் மாநிலங்களுக்கு இடையே போட்டியை உருவாக்கி விலைகள அதிகரிக்க ட்ரம்ப் வழிவகுத்து வருகிறார் என்று நியூயார்க் கவர்னர் குற்றம்சாட்டினார்.
முந்தைய ஆட்சியின் தொழிற்துறை குறைப்பு நடவடிக்கையினால் நிறைய சாதனங்கள் மருத்துவ சப்ளைகளுக்கு சீனாவை நம்ப வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. வைரஸின் மூல நாடு இதன் மூலம் பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
தற்போது ஒரு வெண்ட்டிலேட்டர் விலை 25,000 டாலர்களாக அமெரிக்காவில் உள்ளது. ஆனால் ட்ரம்ப் சில கவர்னர்கள் தங்கள் தேவைகளை கூட்டி கூறுகின்றனர் என்கிறார் அதிபர் ட்ரம்ப்.
அமெரிக்க மருத்துவ நிபுணர்களான ஆண்டனி ஃபாசி, மற்றும் டெபோரா பர்க்ஸ் ஆகியோர் அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதவாக்கில் கணக்கிட்டால் பலி எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்று பீதியைக் கிளப்பியுள்ளனர்.