

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளது.
பிரிட்டனில் 22,141 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் நேற்றுமுன்தினம் 210 பேர் உயிரிழந்
தனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 1,408 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் பாதிப்பு தொடர்பாக பிரிட்டிஷ் அரசின் புள்ளி விவரத்துறை ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "மருத்
துவமனைகளில் நேரிட்ட உயிரிழப்புகளை போன்று வீடுகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன்படி பிரிட்டனின் உயி
ரிழப்பு மேலும் 24 சதவீதம் அதிகமாக இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 6.64 கோடி மக்கள் வசிக்கின்ற
னர். அதில் 3 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் காய்ச்சலால் 3,040 பேர் உயிரிழந்துள்ளனர். 1,64,274 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டில் நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3,000 பேர் உயிரிழந்தனர். அந்த எண்ணிக்கையைவிட கரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக நியூயார்க் மாகாணத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அமெரிக்க ராணுவத்தில் 1,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று
ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலியில் இதுவரை 1,01,739 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் நேற்று முன்தினம் 812 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக 11,591 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் நேற்று முன்தினம் 849 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டில் இதுவரை 8,189 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனியில் 61913, இரான் 44606, பிரான்ஸ் 44550, சுவிட்சர்லாந்து 16176, துருக்கி 10827, தென்கொரியா 9786 என உலகம் முழுவதும் 8,00,49 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 38,714 பேர் உயிரிழந்துள்ளனர்.