

நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் இருந்து வான் கோவின் ஓவியம் திருடப்பட்டுள்ளன.
மேற்கு ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் 1.72 கோடி மக்கள் வசிக்கின்றனர். அந்த நாட்டில் 12 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 864 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அந்த நாடு முழுவதும் சமூக விலகல் கட்டுப்பாடு அமல் செய்யப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் பொதுஇடங்களில் 1.5 மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அருங்காட்சியகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் நெதர்லாந்தின் லாரன் நகரில் உள்ள சிங்கர் லாரன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த, பிரபல ஓவியர் வான் கோவின் ஓவியம்திருடப்பட்டுள்ளது. கோரிங்கர் அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்ட வான் கோவின் 'ஸ்பிரிங் கார்டன்' ஓவியம் திருடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.