அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்குக் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது: ட்ரம்ப்

அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்குக் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது: ட்ரம்ப்
Updated on
1 min read

அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ நாம் இன்று கரோனா வைரஸுக்கு எதிரான போரில் புதிய எல்லையை அடைந்துள்ளோம். மற்ற எல்ல்லா நாடுகளைவிட அமெரிக்காவில் சுமார் 10 லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன”என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுமார் 1,60,000 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 3,000த்திறும் அதிகமானோர் கரோனா வைரஸுக்கு பலியாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவில், கரோனா வைரஸ் தீவிரம் அதிகமாக இருப்பதை தொடர்ந்து வரும் ஏப்ரல்-30-ம் தேதி வரை சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 37,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in