Published : 31 Mar 2020 08:16 AM
Last Updated : 31 Mar 2020 08:16 AM

அமெரிக்க கரோனா வைரஸ் பலி 3,000-த்தைக் கடந்தது: ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக தரவு

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 3,000-த்தைக் கடந்தது என்றும், மொத்தமாக கரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை 1,63,000 என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 3008 ஆக உள்ளது. இத்தாலி, சீனா, ஸ்பெயினைத் தாண்டி 163,240 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் அமெரிக்க அரசாங்கம் மந்தமாகச் செயல்பட்டதற்காக ட்ரம்ப் அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க சுகாதார அமைப்பின் குறைபாடுகள் கரோனா மூலம் தெள்ளத் தெளிவாகியுள்ளன. கரோனா மையமான நியூயார்க்கில், மருத்துவமனைகளில் போதிய முகக்கவசங்கள், உயிர்ப் பாதுகாப்பு ரெஸ்பிரேட்டர்கள் போன்றவை பற்றாக்குறையாக இருந்தன.

கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் எகிறுவதையடுத்து ஈஸ்டருக்குப் பிறகு லாக்-டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அதிப்ர் ட்ரம்ப் கூறியதிலிருந்து பின்வாங்கி தற்போது ஏப்ரல் 30ம் தேதி வரை லாக்-டவுன் தொடரும் என்று கூறியுள்ளார்.

கரோனா நிலைமை இன்னும் மோசமானல் அடுத்த 2 வாரங்களில் 2 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடலாம் என்று கரோனா ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி கூறியதையடுத்து அங்கு கடும் பீதி நிலவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x