கரோனா சிகிச்சை மையம்; தனது கட்டிடத்தை வழங்கிய துபாய் வாழ் இந்தியர்

கரோனா சிகிச்சை மையம்; தனது கட்டிடத்தை வழங்கிய துபாய் வாழ் இந்தியர்
Updated on
1 min read

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாகப் பயன்படுத்த துபாயில் வாழும் இந்தியர் ஒருவர், தனது கட்டிடத்தை அளித்துள்ளார்.

துபாயில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் சோப்ராஜ். இவர் தனக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாகப் பயன்படுத்தக் கொடுத்துள்ளார். இதனை துபாயின் சுகாதாரத் துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சோப்ராஜ் எழுதிய கடிதத்தில், “இது மிகவும் கடினமான நாட்கள் என்று நம்புகிறேன். இந்தத் தொற்றுநோயை சமாளிக்க நாம் சமூகமாக ஒன்றிணைந்து நம் நாட்டை ஆதரிப்பது கட்டாயம்.

கடந்த 25 ஆண்டுகளாக எனது வெற்றி மற்றும் வளர்ச்சிக்குப் பங்களித்த நகரின் முக்கியமான காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு எனது உதவிகளை வழங்குவதற்கும், தொடர்ந்து நகரத்தை ஆதரிப்பதற்கும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 34,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in