Last Updated : 30 Mar, 2020 12:15 PM

 

Published : 30 Mar 2020 12:15 PM
Last Updated : 30 Mar 2020 12:15 PM

ஜப்பானின் பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கரோனா வைரஸுக்குப் பலியானார்

ஜப்பானில் 1970களிலிருந்து வீடுதோறும் புழங்கும் ஒரு பெயர் உண்டென்றால் அது நகைச்சுவை நடிகர் கென் ஷிமுராதான். இவர் கரோனா வைரஸுக்குப் பலியாகியுள்ளது அங்கு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இவருக்கு வயது 70.

கடந்த வாரம் இவருக்கு கரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று சோதனையில் வெளியானது.

ஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்திகளின் படி, நடிகர் கென் ஷிமுரா மார்ச் 20ம் தேதி டோக்கியோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இவருக்கு காய்ச்சலுடன் கடும் நிமோனியா இருப்பதும் தெரியவந்ததையடுத்து மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டதில் இவருக்கு கோவிட்-19 இருப்பது மார்ச் 23 உறுதி செய்யப்பட்டது.

ஆனால் இவர் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றே கூறப்பட்டு வந்தது. ‘ஷிமுர கென் நோ பகாடோனோ சமா’ என்ற ஷோ இவரது பிரபலத்துக்குச் சான்று.

இவர் முதல் ஃபீச்சர் படமான ‘காட் ஆஃப் சினிமா’ என்பதில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார், இதன் இயக்குநர் யோஜி யாமடா.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு காலவரையரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேற்கு டோக்கியோவை அடுத்துள்ல ஹிகஷிமுராயமா என்ற இடத்தில்தான் இவர் வளர்ந்தார். ஜப்பானிய ராக் பேண்ட் மற்றும் காமெடி குழுவான தி ட்ரிஃப்டர்ஸ் என்பதில் இணைந்தார்.

இந்தக் குழுவின் பிரதான காமெடி ஷோ- ஆன ஹச்சிஜிதயோ ஜெனிங்ஷுகோ (நேரம் 8 மணி, அனைவரையும் ஒன்று கூட்டுங்கள்) என்று இந்த காமெடி ஷோவுக்குப் பெயர். ஸ்லாப்ஸ்டிக் காமெடிக்குப் பெயர் பெற்றவர்.

தன்னுடைய நினைவுக் குறிபில் ஷிம்ரா, தான் அமெரிக்க காமெடியன் ஜெரி லூயிஸ் மூலம் ஆரம்பத்தில் தாக்கம் பெற்றதாகத் தெரிவித்திருந்தார்.

1980-களில் ஹிட் ஷோக்களான பாகா டொனோசமா (முட்டாள் பிரபு) மற்றும் ஹென்னா ஓஜிசான் மூலம் அங்கத நகைச்சுவை காமெடியனாக உருவெடுத்தார்.

இவரது மறைவு ஜப்பான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x