

கரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் காட்டுத் தீ போல் வேகமாகப் பரவி வருகிறது, கரோனா வைரஸுக்கு மட்டும் ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள், 3.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு(WHO) வெளியிட்ட புள்ளவிவரங்கள்படி, “ கரோனா வைரஸுக்கு திங்கள்கிழமை காலை நிலவரப்படி உலகில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 126 ஆக இருக்கிறது. இதில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 457 பேர் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 21 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களில் மட்டும் 50 ஆயிரம் கரோனா நோயாளிகள் உருவாகியுள்ளனர், இதில் ஸ்பெயினில் ஒரேநாளில் அதிகமான அளவு உயிரிழப்பு ஏற்பட்டது.ஸ்பெயின் நாட்டில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 838 பேர் உயிரிழந்தனர் என்று அந்த நாட்டு சுகாதாரத்துறையினர் ெதரிவிக்கின்றனர்
ஸ்ெபயின் நாட்டில் கடந்த 3-ம் தேதி முதல் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் அடுத்த 25 நாட்களில் 6,525 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 6 ஆயிரத்து 549 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது இதன் மூலம் ஸ்பெயினில் மட்டும் 78 ஆயிரத்து797 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இதில் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மட்டும் கரோனா வைரஸுக்கு 3 ஆயிரத்து 82 பேர் உயிரிழந்தனர், அதாவது நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 47 சதவீதம் மாட்ரி்ட் நகரில் ஏற்பட்டது. 22 ஆயிரத்து 677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியை எடுத்துக்கொண்டால் கரோனா வைரஸால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மட்டும் 10 ஆயிரத்து 779 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸால் நடந்த மரணங்களில் மூன்றில் ஒருபகுதி இத்தாலியில் நடந்துள்ளது. ஸ்பெயின், சீனா பாதிக்கப்பட்டதைக் காட்டிலும் மோசமாக இத்தாலியி்ன் நிலை இருந்து வருகிறது
கரோனா வைரஸால் இத்தாலியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆயிரத்து 689 ஆகவும், அதிலிருந்து 13ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
ஜெர்மனியில் கரோனா வைரஸால் உயிரிழப்பு 541 என்று குறைவாக இருந்தாலும், பாதி்க்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.
பிரி்்ட்டனில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது, 1,228 பேர் இதுவரை கரோனாவால் பலியாகியுள்ளனர்.
மேலும், பெல்ஜியம், நெதர்லாந்தில் பாதி்க்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,702 பேர் பெல்ஜியத்தில் புதிதாக பாதிக்கப்பட்டு, 10ஆயிரத்து 836ஆக அதிகரித்துள்ளது. இங்கு இறந்தவர்கள் எண்ணி்க்கை 431 ஆக அதிகரித்துள்ளது.
நெதர்லாந்தில் கரோனாவால் 771 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், அந்த கொடூர வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது.