கரோனா வைரஸால் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது: ஜெர்மன் அமைச்சர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஜெர்மனியின் ஹெசி மாநில நிதியமைச்சர் தாமஸ் : படம் உதவி ட்வி்ட்டர்
ஜெர்மனியின் ஹெசி மாநில நிதியமைச்சர் தாமஸ் : படம் உதவி ட்வி்ட்டர்
Updated on
2 min read

கரோனா வைரஸால் தனது மாநிலத்தின் பொருளதாரம் சீரிழந்துவிட்டது எனக் கூறி ஜெர்மன் நாட்டின் ஹெஸ்ஸி மாநிலத்தின் நிதியமைச்சர் தாமஸ் ஸ்காபர்(வயது54) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

பிராங்ஃப்ர்ட மற்றும் மெயின்ஸ் நகரங்களுக்கு இடையிலான ரயில்வே இருப்புப்பாதையில் தாமஸின் உடல் நேற்று மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.

ரயில்வே இருப்புப்பாதையில் ஏதோ உடல் இருப்பதை முதலில் பாராமெடிக்கல் துறைையச் சேர்ந்தவர்கள் பார்த்து போலீஸுக்கு தகவல் தெரிவி்த்தனர். போலீஸார் வந்து காயங்களுடன் கிடந்த உடலை மீட்டு, அடையாளம் கண்டதில் அது மாநிலத்தின் நிதியமைச்சர் தாமஸ் என்பது தெரியவந்தது.

தாமஸ் தனது உயிரை மாய்த்துக்கொள்வத்கு முன், அவர் எழுதிய கடிதம் தொடர்பாக பிராங்ஃபர்டர் ஆல்ஜெமினி ஜீடங் எனும் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மாநிலத்தின் நிதிச்சூழல், நிதிநிலை, தொழில் ஆகியவை குறித்து மக்களுக்கு அறிவி்த்து வந்த தாமஸ் கடந்த சில நாட்களாக எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஆனால், தனக்கு நெருக்கமானவர்களிடம் கரோனா வைரஸால் மாநிலத்தின் நிதிநிலைமை மோசமடைந்துவிட்டது என்று வருத்தப்பட்டுள்ளார். இதனால் மனவேதனையடைந்து தாமஸ் தற்கொலை ெசய்திருப்பார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் சென்டர் ரைட் கிறிஸ்டியன் டெமாக்ரட்ஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராக தாமஸ் இருந்து வந்தார். ஹெசியன் மாநிலத்தின் நிதியமைச்சராகவும், மிகவும் சுறுசுறுப்பானராகவும், மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றவராகவும் இருந்து வந்தார்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிதியமைச்சராக தாமஸ் இருந்து வருகிறார்

ஹெசி மாநிலத்தின் முதல்வராக இருக்கும் வோக்கர் போபியருக்கு அடுத்தாற் போல் முதல்வராக தாமஸ்தான் நியமிக்கப்பட வாய்ப்பு இருந்தது. அடுத்துவரும 2023-ம் ஆண்டு தேர்தலில் தாமஸ்தான் மாநிலத்தின் முதல்வராக வருவார் என்று கட்சிக்குள் பேசப்பட்டு வந்தது.

ஆனால் ஹெசி மாநில முதல்வர் போபியர் கூறுகையில், “ எனது நிதியமைச்சர் தாமஸ் மறைவு எனக்கு மிகப்பெரிய சோகத்தையும், எனது நம்பிக்கையை குலைப்பதாகவும் இருக்கிறது. கரோனா வைரஸால் மாநிலத்தின் நிதிநிலைமை, பொருளாதாரம் சீர்குலைந்து வருவது தொடர்பாக பலமுறை என்னிடம் தாமஸ் கவலைப்பட்டார். மக்களின் எதிர்பார்ப்புகளை நம்மால் நிறைவேற்ற முடியுமா என்பது அவரின் மிகப்பெரிய கவலையாக இருந்து வந்தது. அவரின் மறைவு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார். தாமஸுக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in