Published : 28 Mar 2020 17:51 pm

Updated : 28 Mar 2020 17:53 pm

 

Published : 28 Mar 2020 05:51 PM
Last Updated : 28 Mar 2020 05:53 PM

லாக்-டவுன் மீறல்:  ரப்பர் புல்லட்கள் பாய்ந்தது- அதிர்ச்சியில் மக்கள்; பதற்றத்தில் விழுந்தடித்து சிதறிய கூட்டம்- தென் ஆப்பிரிக்காவில் போலீஸ் அத்துமீறல்

s-african-police-fire-rubber-bullets-at-shoppers-during-lockdown
ஜொஹான்னஸ்பர்க் பிரபல ஷோப்ரைட் மளிகை ஷாப்பில் வரிசை கட்டி நின்ற மக்கள்.

கரோனா வைரஸ் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டதை மீறி ஜொஹான்னஸ்பர்கில் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குழுமிய மக்கள் மீது போலீஸார் ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.

ஜொஹான்னஸ்பரில் ஷாப்ரைட் என்ற பிரபல மளிகைக் கடை முன்பாக 200-300 பேர் குவிந்தனர். இது ஜொஹான்னஸ்பர்கில் உள்ள குற்ற நடவடிக்கை அதிகம் உள்ள இயோவில்லில் உள்ளது, இது வர்த்தக நகரமும் கூட. தென் ஆப்பிரிகாவில் 2வது நாளாக தேசிய அளவிலான லாக்-டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது.

கியூவில் நின்றாலும் பரவாயில்லை ஒருவரையொருவர் இடித்து கொண்டு சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை. உடனடியாக போலீஸ் அங்கு விரைந்து வந்து எச்சரித்தனர், பிறகு அவர்களைக் கலைக்க ரப்பர் புல்லட்களால் சுட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஷாப்பிங் வந்த மக்கள் அதிர்ச்சியில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பதற்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட குழந்தையுடன் வந்தவர்கள் கீழே விழுந்தனர். இதைவிடவும் காட்டுமிராண்டித்தனமாக மக்களை ஆடு மாடுகள் போல் சாட்டையை சொடுக்கி சமூக விலகல் விதிகளை நடைமுறைப் படுத்தினர்.

தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா 21 நாட்கள் லாக்-டவுனை அறிவித்தார். ஆனால் பல ஏழை மக்கள் உத்தரவை ஏற்காமல் உணவுக்காக வெளியே வர நேரிட்டது.

தென் ஆப்பிரிக்காவில் 1,170 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

CORONA WORLDCorona virusCOVID-19South AfricaS.African police fire rubber bullets at shoppers during lockdownலாக்-டவுன் மீறல்:  ரப்பர் புல்லட்கள் பாய்ந்தது- அதிர்ச்சியில் மக்கள்; பதற்றத்தில் விழுந்தடித்து சிதறிய கூட்டம்- தென் ஆப்பிரிக்காவில் போலீஸ் அத்துமீறல்தென் ஆப்பிரிக்காவில் போலீஸ் அராஜகம்ரப்பர் புல்லட்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author