கொடூரமான தாக்குதல்: ஆப்கன் குருத்வாரா மீதான தீவிரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

கொடூரமான தாக்குதல்: ஆப்கன் குருத்வாரா மீதான தீவிரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
Updated on
1 min read

ஆப்கன் குருத்வாரா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் நடு மையத்தில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாரா மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். மேலும், துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 27 பேர் பலியாகினர்.

ஆப்கான், ஷோர் பஜார் பகுதியில் புகுந்த தீவிரவாதிகள் சுமார் 150 பேர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த குருத்வாராவுக்குள் புகுந்தனர். இதில் 27 பேர் பலியாகி மேலும் சிலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சீக்கிய குருத்வாரா மற்றும் சமூகம் மீது ஐஎஸ் ஐஎஸ் தொடுத்த கொடூரமான தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பிற தீவிரவாத சமூகத்திலிருந்து ஆப்கன் மக்கள் விரைவில் விடுதலை பெறுவர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவும் இந்தத் தாக்குதலுக்குத் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.

முஸ்லிம் நாடான ஆப்கனில் சுமார் 1000 சீக்கியர்களும் இந்துக்களும் வசித்து வருகின்றனர். முன்னதாக இந்த மாதத் தொடக்கத்தில் ஐஎஸ் ஜிஹாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலியாகினர். ஐஎஸ் அமைப்பு என்பது இஸ்லாமியத்தின் தீவிர சன்னி பிரிவாகும். 2015-ல் ஆப்கனில் இது செயல்படத் தொடங்கியது.

சமீபகாலமாக அமெரிக்க ஆப்கன் படையினரின் தாக்குதலாலும் தலிபான்களின் தாக்குதலாலும் ஐஎஸ் தீவிரவாதம் பின்னடைவு கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in