Last Updated : 24 Mar, 2020 12:52 PM

 

Published : 24 Mar 2020 12:52 PM
Last Updated : 24 Mar 2020 12:52 PM

2 தொற்றுநோய்களை ஒழித்து உலகுக்கே வழிகாட்டிய இந்தியா: மீண்டும் அதையே பின்பற்றுக; உலக சுகாதார நிறுவனம்

2 தொற்று நோய்களை ஒழித்து உலகுக்கே வழிகாட்டிய இந்தியா, இப்போதும் அதே வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ரியான் கூறும்போது, ''இந்தியாவுக்கு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் அசாத்திய ஆற்றல் உண்டு. ஏனெனில் சிற்றம்மை, போலியோ ஆகிய இரண்டு தொற்று நோய்களை ஒழித்த அனுபவம் இந்தியாவுக்கு இருக்கிறது.

நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்வதால், ஆய்வகங்களின் அளவையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. அதிக அடர்த்தி கொண்ட நாடுகளில் வைரஸ் பரவல் அதிகமாகவே இருக்கும்.

எனினும் இந்தியாவுக்கு அதை ஒழிக்கும் ஆற்றல் உண்டு. முன்பு தொற்றுநோய்களை ஒழித்து, உலகத்துக்கே வழிகாட்டிய இந்தியா, இப்போதும் அதே வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 14,652 பேர் பலியாகி உள்ளதாகவும் 3,34,981 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x