மெலானியா ட்ரம்ப்புக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: வெள்ளை மாளிகை

மெலானியா ட்ரம்ப்புக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: வெள்ளை மாளிகை
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப்புக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சீனா, இத்தாலிக்கு அடுத்து கோவிட்-19 காய்ச்சலால் (கரோனா வைரஸ்) அமெரிக்கா கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. நேற்று மட்டும் 10 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 43,700 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு பலி எண்ணிக்கை 500-ஐக் கடந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மனைவி மெலானியா ட்ரம்ப்புக்கு கோவிட்-19 காய்ச்சல் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், ”அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கோவிட்-19 காய்ச்சல் பரிசோதனை
செய்யப்பட்ட அதே நாளில்தான் மெலானியா ட்ரம்ப்புக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

உலகம் முழுவதும் 190 நாடுகளில் பரவியுள்ள கோவிட்-19 ( கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14,652 . சுமார் 3,34,981 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in