

விண்வெளியில் நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே புதிய புறக்கோள் ஒன்று நாசா தொலைநோக்கி உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ளத் தேவையான அறிவியல் தகவல்களைச் சேகரிக்க இந்தப் புறக்கோள் ஒரு தங்கச் சுரங்கமாக விளங்கும் என்று கூறப் பட்டுள்ளது.
ஹெச்.டி.219134பி, என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புறக்கோள் பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. தன்னுடைய நட்சத்திரத்தை மிக நெருக்கமாகச் சுற்றி வரும் இந்தப் புறக்கோள் பூமியை விட 4.5 மடங்கு அதிக நிறை கொண்டதாக இருக்கிறது.
இந்தப் புறக்கோளின் நட்சத்திர ஒளியில் இருந்து வேதியியல் தகவல்களைப் பெறுவதே இதனை ஆராய்வதன் முக்கிய இலக்கு என்று கூறப்பட்டுள்ளது. ’
ஒருவேளை இந்தப் புறக்கோளில் வளி மண்டலம் இருந்தால், அதனுடைய இயல்புகள் மேற்கண்ட அதன் நட்சத்திர ஒளி மூலம் தெரிய வரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.