கரோனாவால் பெரிதும் பாதிப்புக்குள்ளான இத்தாலிக்கு விரைந்த கியூபா மருத்துவர்கள்

கரோனாவால் பெரிதும் பாதிப்புக்குள்ளான இத்தாலிக்கு விரைந்த கியூபா மருத்துவர்கள்
Updated on
1 min read

கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் இத்தாலிக்கு உதவ கியூபாவின் மருத்துவ குழு அங்கு விரைந்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் மிகப் பெரும் பாதிப்பை இத்தாலி எதிர்க் கொண்டுள்ளது.

இத்தாலியில் கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இத்தாலி இதுவரை 5,476 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 59,138 பேர் பாதிக்கப்பட்டுளனர்.

கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 59, 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 23,783 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 19,846 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாலி மருத்துவர்கள் இரவுப் பகலாக கரோனா காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கரோனாவால் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ள இத்தாலிக்கு உதவும் வகையில் கியூபா மருத்துவர்களையும், மருத்து ஊழியர்களையும் அங்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து கோவிட் 19 காய்ச்சலால் பெரிதும் பாதிப்புக்குள்ளான இத்தாலியில் லோம்பார்டி மாகாணத்துக்கு மருத்துவ குழு சென்றுள்ளது.

இதுகுறித்து கியூபா மருத்துவர் ஒருவர் கூறும்போது, “ நாங்கள் அனைவரும் பயத்தில் இருக்கிறோம் எனினும் எங்களது புரட்சிகர கடமையை நிறைவேற்ற தேவை உள்ளது. எனவே நாங்கள் பயத்தை ஒருபக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டோம்” என்றார்.

கோவிட் -19 காய்ச்சல் (கரோனா வைரஸ் ) உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வைரஸ் பாதிப்புக்கு சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிப்பை அடைந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in